2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘எமக்கு யாரும் படிப்பிக்க தேவையில்லை’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி

இலவசக் கல்வியை நாங்களே ஆரம்பித்தோம். அது பற்றி எமக்கு யாரும் படிப்பிக்கத் தேவையில்லையென, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, சைட்டம் கல்லூரி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  

“சைட்டம் கல்லூரி தொடர்பில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எம்மால் மாற்ற முடியாது. ஆனால், அந்தத் தீர்ப்புத் தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும். 

நாட்டில் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்கு வந்து, கல்வி கற்க ஆர்வமாக உள்ளனர்.  

இந்த வருடத்துக்குள் இரண்டு வைத்தியக் கல்லூரிகளைப் புதிதாக அமைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். வயம்ப மற்றும் ருவன்புரவில் இரண்டு மருத்துவ கல்லூரிகள் இந்த வருட இறுதிக்குள் திறந்து வைக்கப்படும். இவை இரண்டும் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளாக இருக்கும்.  

நாட்டில் வைத்தியசாலை ஒன்றை அமைப்பது மிகவும் கடினம். அதற்கு அதிக நிதி தேவைப்படும். இங்கு கல்லூரிகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கள், வைத்தியசாலைகளை அமைக்க முன்வருவதில்லை.  

எனவே, அரசாங்க வைத்தியசாலைகளிலேயே, அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X