2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் காலமானார் 

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும்.  பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

அவரது மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், அதிபர் டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் தமிழரான எஸ்.ஆர். நாதன் 1924 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி பிறந்தார்.

சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1955இல் மருத்துவ சமூக அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் துாதர் என படிப்படியாக பல முக்கிய பதவிகளில் வகித்து இறுதியில் சிங்கப்பூர் அதிபராக பொறுப்பேற்றார்.

எஸ். ஆர். நாதன் 1999இல் சிங்கப்பூரின் ஆறாவது ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்றார். 2011ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X