2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்

Editorial   / 2025 ஜூலை 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம்,  கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  இடம்பெற்றுள்ளது.

அங்கு 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது பாடசாலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் அந்த மாணவி பங்கேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள். அதாவது கடந்த 6 ஆண்டுகளாக தன்னை தனது தாயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்தாள். இதைக்கேட்டு ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பாடசாலைக்கு வந்த பொலிஸார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதாள். இதையடுத்து பொலிஸார் அந்த மாணவியின் தாயை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருமணத்துக்கு பிறகு கணவனுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தனது மகளுக்கு கற்றுக்கொடுத்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.

அதையடுத்து பொலிஸார் அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது   வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். மகளுடன், தாய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X