Mithuna / 2024 ஜனவரி 08 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் மூன்று மாணவிகள், கடந்த 4ம் திகதி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கமெராக்களை,பொலிஸார் ஆய்வு செய்தனர்.
இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
அவர்களை பொலிஸார் விசாரித்த போது, கொரியாவில் பிரபல பிடிஎஸ் (BTS) இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்ப்பதற்காக கொரியா செல்ல முயற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
4 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago