Freelancer / 2022 ஜனவரி 05 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான இளைஞனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அறுவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா, இன்று (05) உத்தரவிட்டார்.
மேலும் ஆறு சிறுவர்களையும் சிறைச்சாலை பாதுகாப்பில் மாகொல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 12 மற்றும் 16 வயதுடையவர்கள் என கிரான்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இளைஞன், டிக் டொக் சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதலால், படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
21 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
20 Mar 2026
20 Mar 2026