Thipaan / 2016 நவம்பர் 06 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கும்புறுப்பிட்டி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற சந்தேகநபருக்கு, ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வந்த பெர்ணான்டோ, இன்று ஞாயிற்றுக்கிழமை (06) உத்தரவிட்டார்.
கும்புறுப்பிட்டி காட்டுப்பகுதியிலிருந்து, இன்று அதிகாலை 2 மணியளவில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற போது, வீதிப் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்தநபரை, பொலிஸார், நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தியபோதே, மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு ஏற்கெனவே திருகோணமலை நீதிமன்றத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கு இடம்பெற்றதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025