2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Thipaan   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனச் சாரதிகள் மூவரையும் இன்று (04) அதிகாலை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த மூதூர் பொலிஸார், டிப்பர்கள் மூன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று ரிப்பர் சாரதிகளும் மண் அகழ்வு அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்துக்கு மாறாக பிரிதொரு இடத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டமையினாலையே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று ரிப்பர் வாகனங்களும் மூதூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட மூன்று சாரதிகளையும், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X