Thipaan / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியின் மொறவௌ சந்தியில் இரண்டு டிமோ பட்டாக்கள், இன்று (29) நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இரண்டு சாரதிகளும் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் வத்தேகம, டி.கம்மானய இலக்கம் 07 இல் வசித்துவரும் டி.எம்.அனுறுத்த தரிது (25 வயது) மற்றும் கல்கமுவ, ஹதறகல்ல பகுதியச்சேர்ந்த துமித் வன்னிநாயக்க (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாமல்வத்தை பகுதியிலிருந்து பால் ஏற்றிக்கொண்டு வந்த டிமோ பட்டா, பிரதான வீதியினூடாக வந்த டிமோ பட்டாவுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இரு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளனர்.
விபத்து தொடர்பாக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago