Thipaan / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட பெற்றோர்களின் சந்திப்பு, நகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (27) காலை நடைபெற்றது.
காலை 11.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணிவரை, சங்கத்தின் தலைவி ஆஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காணமாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்கள்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) சர்வதேச காணாமல் ஆக்க்பட்டவர்களின் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று நடடைபெறவுள்ளது.
இதில் எமது பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் அன்றைய தினம் திருகோணமலையில் இதனை அனுஸ்டிக்க முடியாது போய்விடும். இதன் காரணத்தால் இன்று (நேற்று) இதனை மேற்கொள்கின்றோம் என, சங்கத்தின் தலைவி ஆஷா தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago