Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு தன்னை யாரும் அழைக்கவில்லையெனவும் தானும் கட்சி மாறப்போவதில்லையெனவும் தெரிவித்த பொதுஜன பெரமுனைக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே, “நான் கட்சி தாவப்போவதாக கடந்த சில நாள்களாக ஊடகங்களில் வந்த செய்தியில் உண்மையில்லை” என்றார்.
திருகோணமலையில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில், அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் தான் அரசியல் வேலை செய்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், பொது வெளியிலோ தனிப்பட்ட ரீதியாகவோ எவரும் தன்னை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைக்கவில்லை எனக் கூறிய அவர், தான் கட்சி மாறுவதாக வந்த செய்தியை மறுத்தார்.
2006ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே தான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியதாக சுட்டிக்காட்டினதுடன், அந்தக் காலம் தொடக்கம் தன்னுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் பயணம் செய்த, தான் நேசிக்கின்ற தோழமையுடன் தொடர்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கட்சி மாறுமாறு கேட்கவில்லையெனத் தெரிவித்தார்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சந்திரானி பண்டார, தன்னுடன் எவ்விதத் தொடர்புமில்லாத போதும், ஊடகங்களுக்கு தான் கட்சிமாற இருப்பதாகத் தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, மேற்படி அமைச்சரின் கூற்றில் உண்மை இல்லையென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago