2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கசிப்புடன் கைதான மூவருக்கும் விளக்கமறியல்

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி முதலைமடு காட்டுப் பகுதியில் வைத்து கசிப்புடன் கைதான மூன்று சந்தேக நபர்களையும் இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்றுப் புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.

சட்டவிரோத கசிப்பு நிலையம் இயங்குவதாக மூதூர் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்திய போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இச் சுற்றிவளைப்பின் போது 4 பரல் கசிப்பும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 9 பரலும் கைப்பற்றப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் நிலைய பிரதி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக டி சில்வா, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விமலதாச ஆகியோரின் ஆலோசனையின் பேரில், உதவி பொலிஸ் பரிசோதகர் தேவானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X