Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், சஹரின் எம். இஸ்மத், எஸ்.சசிக்குமார்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், இன்று (30) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளானோரின் குடும்பங்கள், கிராமிய பெண்கள், கிராமிய சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களே இணைந்து நடாத்தின.
இதில், மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்த 150 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
எமது உறவுகளைத் தேடித்தாருங்கள், சர்வதேச பொறிமுறையை அமுல் செய்யுங்கள், மாவட்டங்களில் அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகாழாமையை உறுதிப்படுத்துங்கள் போன்ற பல கோசங்களை எழுப்பியதுடன் தாங்கியிருந்தனர், இறுதியில் ஆளுநரிடம் சமர்பிக்க மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025