Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலைராஜ்குமார், பொன் ஆனந்தம்
சம்பூர்,ஸ்ரீ முருகன் ஆலயத்தை காணவில்லை. இதற்கு என்ன நடந்தது. இது பற்றி கடற்படையினர் தெரிவிக்க வேண்டுமெனக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கேள்வியெழுப்பினார்.
2015 ஆம் ஆண்டு, மீள்குடியேற்றம் நிகழ்ந்த பொழுது கடற்படை குறித்த இடத்தில் இருந்தனர். இதனையடுத்து மக்களின் மீள்குடியேற்றம் காரணமாக அதனை கையளித்தனர். இது குறித்து ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கு எமது நன்றியை முன்னர் தெரிவித்தோம். இப்போதும் மீள தெரிவிக்கின்றோம். மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அதனால் போகமுடிந்தது. ஆனால், கடற்படையினரை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. அவர்களுக்கு அதற்கு மாற்றிடமாக பெரியதொரு நிலப்பரப்பு வழங்கப்பட்டதன் பின்னரே அங்கிருந்து அகன்றனர்.
இங்கு ஸ்ரீ முருகன் ஆரம்ப பாடசாலையுள்ளது. அதற்கருகிலிருந்த குன்றும் உள்ளது. அந்த குன்றிலிருந்த முருகன் ஆலயத்தைக் காணவில்லை. ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரையை உள்ளதாக நானறிகின்றேன்.
ஆனாலும் உள்ளபகுதியானது இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கருதி அப்பகுதிக்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. என்பதுடன், அங்குள்ள தனியார் காணிகளுக்கும் செல்வதற்கு இடையூறு செய்வதாகக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
19 minute ago
26 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
31 minute ago
40 minute ago