2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, கன்தமலாவ பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நான்கு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, கோமரங்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அவர்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று (01) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தைச்சேர்ந்த கே.ரத்ணவீர (42 வயது), எம்.ரத்ணாயக்க (40 வயது), எச்.முத்துபண்டா (51 வயது), ஆர்.ரண்பண்டா (48 வயது)  ஆகியோரே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

விழுந்து கிடந்த மரத்திலிருந்த தேன் கூட்டை வெட்டிய போது, அருகே காணப்பட்ட மரத்திலிருந்த குளவி கூடு கலைந்ததிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X