2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சேனைப் பயிர்ச் செய்கைக்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரொட்டவெவக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த சேனைப் பயிர்ச் செய்கையை மீண்டும் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரொட்டவெவக் கிராம மக்கள் விவசாயம், மீன்பிடி ஆகியவற்றை ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டவெவக் குளம், திம்பிரிவௌக் குளம், நாவல்க் குளம் ஆகியவற்றில் நீரின்றி அவதியுற்ற அக்காலகட்டத்தில்; கூட பருவ மழையை நம்பி  கடந்த 30 வருடங்களாக 500 குடும்பங்கள் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இப்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்த இடங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவிடாது, வனப் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தற்போது தடுத்து வருகின்றனர்.

யுத்த காலத்திலிருந்து சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வந்த இடங்கள், அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று கூறுவதை தாம் ஏற்பதாகவும் அவர்கள் கூறினர்.

எனவே, தாம் ஏற்கெனவே சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொண்டுவந்த இடங்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுவதற்கு அனுமதிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X