Gavitha / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமியொருவரை, அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று செவ்வாய்கிழமை (30) உத்தரவிட்டார்.
கொழும்பு, வத்தளைப் பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி, பெற்;றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு கடந்த 16 செவ்வாய்கிழமை திகதி வெளியேறி திருகோணமலை பிரதேசத்தில் உள்ள காதலனுடன் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தநிலையிலே குறித்த சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கமைய சிறுமியை திங்கட்கிழமை (29) மாலையில் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான குறித்த சிறுமியை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை (30) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைப்பதோடு வைத்திய அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago