Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 24 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரியினுடைய எழுத்து மூல கடிதத்தின் பிரகாரம் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவுக்கிளை தலைவருமான ஜெயசிறில் கிழக்கு மாகாணம் குற்றத்தடுப்பு உளவு பிரிவினரின் திருகோணமலை தலைமை காரியாலயத்தில் 22 ஆம் திகதிவௌ்ளிக்கிழமை 3 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கும் மக்களுக்கும் கருத்து தெரிவிக்கையில்.
“இந்த நாட்டிலே ஜனநாயக ரீதியாக தமிழர்களுடைய இளைஞர் உரிமைக்காக குரல் கொடுத்து செயல்படுகின்ற எங்களுடைய செயல்பாட்டை மழுங்கடிப்பதற்காகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி எங்களை ஓரங்கட்டுவதற்காகவும் பல வருட காலமாக விசாரணை நீதிமன்ற வழக்குகள் இடம் பெற்று வந்து கொண்டே இருக்கின்றது.
உண்மையில் எந்தவித பிழையும் செய்யாத நாங்கள் இவ்வாறான பெரிய குற்ற பிரிவுகளினால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றோம். ஆனால் பல குற்றவாளிகள் பதவிகளோடு அரசாங்கத்தின் அதிகாரத்தோடும் இன்று வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பை கொடுத்துவிட்டு குற்றமில்லாத எங்களை குற்றவாளி போன்று துன்புறுத்துவதும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் இந்த அரச செயல்பாடு ஆகும்.
உண்மையிலேயே ஈஷ்டர் குண்டு தாக்குதலில் கூட பல ஆவணம் இருக்கக்கூடிய பல ஆயுததாரிகள் பல கொலை சம்பவங்களோடு தொடர்புபட்ட விடயங்கள் என்றும் பத்திரிக்கை வாயிலாகவும் பாராளுமன்றத்திலும் பல சாட்சியளிக்கப்பட்டும் அவ்வாறானவர்களை வெளியில் விட்டுவிட்டு எவ்விதமான குற்றங்களையும் செய்யாத எங்களுக்கு விசாரணை செய்வது என்பது நாங்கள் இந்த இலங்கை நாட்டிலே துன்புறுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பது என்பது மனக்கவலை.”என்றார்.
24 minute ago
59 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
4 hours ago
5 hours ago