2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

Janu   / 2023 ஜூலை 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின்  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருடர்களின் கைவரிசை  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கந்தளாய் பகுதியில் திருடர்கள் இரவு வேளையில் தமது கைவரியை காட்டி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  அண்மையில் திருட வந்த இரண்டு  திருடர்கள் சிசிடிவி  கேமராவை கண்டதும் தலைதெறிக்க ஓடி உள்ளார்கள்.

போதைக்கு அடிமையானவர்கள் தான் இச் செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இப்படியாக கந்தளாய் பகுதியின்  பேராறு, ரஜஎல,  மத்ரஸா நகர் மற்றும் மூன்றாம் கொலனி போன்ற கிராமங்ககளில் இரண்டு மூன்று வீடுகளில் திருட்டு  சம்பவங்கள் நடைபெற்று வருகின்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் மக்கள் இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகிறார்கள். தனித்துக் குடியிருக்கும் வீடுகளிலும், ஆட்கள் குடியிருக்கும் வீடுகளிலும் துணிந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது  சாதாரணமாகி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். 

திருட்டுச் சம்பவங்கள் விடயத்தில் கந்தளாய் பொலிஸார் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எப்.முபாரக்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .