Gavitha / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை-சிங்ஹபுர பகுதியில் 19 வயதுடைய பெண்ணொருவரின் சடலத்தை இன்று வெள்ளிக்கிழமை (26) மீட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி-கலவான பகுதியைச் சேர்ந்த அனிசிகா (வயது 19) என்ற திருமணமாக பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த நுவன் சந்தன அபேவிக்ரம என்ற, சீமெந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் நபரை திருமணம் செய்து வாடகை வீடொன்றில் வாழ்ந்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர், கொலைச் செய்யப்பட்டு துணிகளினால் மூடப்பட்டிருந்ததாகவும் இக்கொலை எப்போது எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago