Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 30 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், ஹஸ்பர்
'அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை' கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் சேனையூர் பிரம்மியா சண்முகராஜாவின் கனதி சிறுகதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (03.07.2023) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணாமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்திபனும், கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தமும், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் க.ராஜனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூலின் வெளியீட்டு உரையை இலக்குமி பிரசுராலய இயக்குனர் கரவை மு.தயாளனும், நூல் விமர்சனத்தை வ.முரளிதரனும் வழங்க, நூல் வெளியீட்டை கவிஞர் ஷெல்லிதாசன் ஆரம்பித்து வைக்க, ஏற்புரையை நூலாசிரியர் வழங்குவார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago