Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாடசாலைகளில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கு இணங்க புதன்கிழமை (20) நடைபெற்றுள்ளது.
போதைவஸ்துக்கு எதிரான வீதியோர நாடகத்தினை கெல்விடாஸ் நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன், இளைஞர் அபிவிருத்தி அகம் இனைந்து, குளக்கோட்டன் வித்தியாலயம், சிராஜ் முஸ்லிம் வித்தியாலயம்,முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இளைஞர் நாடக குழுவினர் திறம்பட நடித்து போதை ஒழிப்பு தொடர்பான பல விடயங்களை முன்கொண்டு வந்துள்ளனர்.
இதில் அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வே.மோகன் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாயம் சார் அபிவிருத்தி உத்தியோகத்தர், இளைஞர் சேவை அதிகாரி, சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
2 hours ago