2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை மரணம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மகனின் தாக்குதலில் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை, நேற்று மாலை (05) உயிரிழந்துள்ளார் என, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, ஆலங்கேணி, சமாஜந்தீவு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரவூப் (45 வயது) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதியன்று, மகன், தந்தையின் தலையில் பொல்லால் தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தந்தையை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மகனான ரவூப் முஜீப் (26 வயது) கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X