2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மரை இறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவப் பகுதியில் 16 கிலோகிராம் மரை இறைச்சியைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, இருபதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வந்த பெர்ணான்டோ, செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

மொறவௌ - டி1 பகுதியைச் சேர்ந்த கோபால் இலிங்கராஷா (வயது 35) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாகப் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119க்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிஸார், மரை இறைச்சியை மீட்டுள்ளதுடன், சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X