Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் மீன் பிடிப்பதற்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் பகுதியில் பாழடைந்த காணிக்குள் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த சம்பூர் பொலிஸார் வெடி பொருட்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருள்களில் 61 டெட்டனேட்டர்கள் மற்றும் டைனமைட் கூறுகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் பீ அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
27 minute ago
41 minute ago
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago
42 minute ago
52 minute ago