2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முகத்தான் குளத்தில் சிரமதானம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேச மக்கள் அதிகளவில் பாவிக்கின்ற முகத்தான் குளம், பிரதேச சபையினராலும் பிரதேச செயலகத்தினராலும், சிரமதான அடிப்படையில், இன்று திங்கட்கிழமை (26) சுத்தம் செய்யப்பட்டது.

முகத்தான் குளத்தைச்சுற்றி காடுகளும் பற்றைகளும் அதிகளவில் காணப்படுவதனால், பாம்புகளும் ஏனைய மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்தன.

இதனையடுத்து, குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் எஸ். நிர்மலதாஸனின் முயற்சியாலும் பிரதேச பொது அமைப்புக்களின் உதவியினாலும் இச்சிரமதானப்பணி இடம்பெற்றதுடன், இப்பணியில் புல்மோட்டை பொது அமைப்புக்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X