2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மோட்டார்க் குண்டு மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 16 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலிருந்து 60 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டொன்று,  நேற்று புதன்கிழமை (15) மாலை மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் காணியில் இராணுவ முகாம் இருந்துள்ளது. யுத்தம் முடிவுற்றதன் பின்னர், உரிய காணிச் சொந்தக்காரரிடம் அக்காணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணிச் சொந்தக்காரர், தனது காணியினை நேற்று துப்பரவு செய்து கொண்டிருந்த போது, குண்டொன்று இருப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் குண்டைச் செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X