2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியின் கன்னியா பகுதியில், மோட்டார் சைக்கிள், மதகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில்,   திருகோணமலை, கன்னியா, மாங்காய் ஊற்று பகுதியைச் சேர்ந்த வை.சுஜிந்தன் (25 வயது) மற்றும் அவரது நண்பரான எம்.ஜேசுராஜ் (26 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேசன் வேலை செய்து வரும் இருவரும் மது போதையில் வீட்டுக்கு செல்லும் போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X