Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டு, வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபர் ஒருவரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று செவ்வாய்கிழமை (06) உத்தரவிட்டார்.
கிழக்கு, மணல் பகுதி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு, குறித்த நபர் அனுமதிப்பத்திரமின்றி கடல்மார்க்கமாக சென்ற போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அப்போது திருகோணமலை பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது, வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே திருகோணமலை பொலிஸார் யாழப்;பாண பொலிஸார் ஊடாக திங்கட்கிழமை (5) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை பொலிஸார் நேற்று (06) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே ஒரு இலட்சம் ரூபாய் சதுரப்பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
20 minute ago
35 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
51 minute ago
1 hours ago