2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் உடும்புகளை வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

சட்டவிரோதமாக இரண்டு உடும்புகளை தனது வீட்டில் கட்டி வைத்திருந்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய ஒருவரை திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவில்  புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர், காட்டில் பிடித்த இரண்டு உடும்புகளையும் வீட்டுக்குக் கொண்டுசென்று கட்டி வைத்;திருந்துள்ளார். இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த வீட்டுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது, அவ்வீட்டில் மேற்படி உடும்புகள் இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு உடும்புகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன், அவற்றை வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X