Thipaan / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் பஸ் ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த ஓய்வு பொலிஸ் உத்தியோகத்தரொருவர், கிண்ணியா தள வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சின்னக் கிண்னியா 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான எம்.ஐ.சுபைர் (60 வயது) என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ், சின்னக் கிண்ணியா சந்திப் பள்ளிக்கு முன்னால் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இவருக்குப் பின்னால் வந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago