Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
ஹொரவ்பொத்தான-வவுனியா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (07) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 17 பேர் படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை மற்றும் அநுராதபுரம் போதான வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விபத்தில் காயமடைந்தவரகள் திருகோணமலை-மஹதிவுல்வௌ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 09 ஆண்களும் 04 பெண்களும் 04 சிறுவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பித்திகொல்லாவ நகரில், நேற்றிரவு (06) இசை நிகழ்ச்சிக்குச் சென்று, இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 17 பேரில் 10 பேர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025