2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கு எச்ஐவி பற்றி அறிவுறுத்தவும்'

Gavitha   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு  எச்ஐவிஃஎயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் எயிட்ஸ் பிரிவு வைத்திய அதிகாரியை நாடி இரண்டு நாட்களுக்கு எயிட்ஸ் பற்றி கைதிகளுக்கு அறிவுறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன் நடாத்தி, அதன் அறிக்கையை அனுப்பி வைக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் எச்.ஐ.வின் தாக்கம் மற்றும் அதனால்  ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து அறிய வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அத்திணைக்களம்  அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X