2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'நல்லுறவுடன் கூடிய செயற்பாட்டினாலேயே துரித அபிவிருத்தியை பெறமுடியும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, றியஸ் ஆதம்

மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைக்குமிடையில் நல்லுறவுடன் கூடிய செயற்பாட்டின் மூலமே துரித அபிவிருத்;தியை அடைய முடியும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான தனிநபர் பிரேரணை இன்று(06) கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இப்பிரேரணையில் கலந்து கொண்டு உiராயாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்கள், கல்விக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசாங்கத்தினால் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையை உடன் நிறுத்த கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லாட்சிக்கு பெரும் பங்காற்றி ஆட்சிக்கு கொண்டுவந்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை விடயமாக முதலமைச்சர் ஏன் பேச வில்லை?

எமக்கு வாக்களித்து  மக்கள் அரசியல் அதிகாரத்தை வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை முறையாகப் பயன் படுத்த வேண்டும். அந்த மக்களின் நலன்களுக்காக அவ்வப்போது பேச வேண்டிய இடத்தில் பேசி முடியுமானவற்றை செய்ய முயற்சிக்க வேண்டும்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X