Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலமொன்று, இன்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம், நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி, காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராமமக்கள், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்தைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .