2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிண்ணியாவில் சகல வசதிகளையும் கொண்ட ஆயுர்வேத வைத்தியசாலை

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதீன் ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் சகல வசதிகளையும் கொண்ட ஆயுர்வேத வைத்தியசாலையொன்று கிண்ணியாவில் நிறுவப்படவுள்ளது.

தற்போது தற்காலிகமாக சிறிய அளவில் இயங்கி வருகின்ற ஆயுர்வேத வைத்தியசாலையினால் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாதுள்ளது.

இதனாலேயே குறித்த வைத்தியசாலை முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் வான்எல, கந்தளாய், மூதூர், தம்பலகமம், முள்ளிப்பொத்தானை மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச மக்கள் நன்மையடையவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X