Gavitha / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.காரத்திகேசு
அம்பாறை திருக்கோவில பிரதேசத்தில்; வன விலங்கு ஜீவராசிகள் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி நேருபுரம் காட்டுப் பகுதியில், காட்டு யானையொன்று வாயில் காயமடைந்த நிலையில் உணவு உற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டதாக அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, தம்பிலுவில் வன விலங்கு ஜீவராசிகள் அதிகாரி ஏ.ஏ.ஹலிமுக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அவர் அம்பாறை வன விலங்கு ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் தருமகீர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினருடன் புதன்கிழமை (11) அப்பகுதிக்குச் சென்று யானைக்கான சிகிச்சைகள் வழங்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக இரு மாதங்களாக மர்மமான முறையில் யானைகள் மரணமடைந்தும் காயமடைந்தும் வருகின்றன. இது சம்மந்தமான விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் இவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் மர்மமான முறையில் மரணமடைந்து வருவது தமக்கு கவலையளிப்பதாகவும் வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago