Kanagaraj / 2015 ஏப்ரல் 24 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்
திருகோணமலையில் இடம்பெற்றுவரும் கிழக்கு மாகாண கலாசார விளையாட்டுப் போட்டியிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நால்வர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
இந்த விளையாட்டுப்போட்டி நடைபெறும் திடலில் தனிசிங்கள மொழியில் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் தேசியகீதமும் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்தே அந்த நால்வரும் வெளியேறியுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரை விளையாட்டுப் போட்டி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது.
இதில் அதிதிகளாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, உட்பட மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, எம்.இராஜேஸ்வரன் ஆகியோர் சென்றிருந்தனர்
அங்கு அனைத்து பதாதைகளும் சிங்கள மொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. தேசிய கீதமும் சிங்களத்திலும் இசைக்கப்பட்டது இதனையடுத்து 4 மாகாண சபை உறுப்பினர்களும் தமிழ் மொழி புறக்கணிகப்பட்டுள்ளது என குற்றம்; சுமத்தி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோருக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து பஸ்கரித்து அங்கிருந்து உடன் வெளியேறியுள்ளனர்.
இந்த விழாவை பகிஸ்கரித்த மாகாணசபை உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
அண்மைக் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற விடயங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான ஒரு நிகழ்வு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு தொலைபேசியில் தமிழ் மொழி புறக்கணிப்பை சுட்டிக்காட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்
17 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago