Gavitha / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூதூரில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் வியாழக்கிழமை (30) மூதூர் கிழக்கு நாவலடி சந்தியில் எதிர்ப்பு ஆட்பாட்டத்தில் ஈடுப்படனர். இதற்கான ஏற்பாடுகளை மூதூர் பீஸ்ஹோம் மற்றும் கிறீன் றிங்கோ ஆகிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்தன.
மூதூர் கிழக்கு பிரதேசம் மிகவும் இயற்கை வளம் நிறைந்த பிரதேசமாகும். இங்கு அதிகமானோர் விவசாயத்தையும் மீன் பிடியையுமே நம்பி தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர். அப்படி இருக்கையில் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால், தமது இயற்கை வளங்களும் தொழிலும் பாதிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். அத்தோடு தமது பரம்பரையினருக்கும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து நிலவுவதாக கவலை தெரிவித்ததோடு இத்திட்டத்தை அரசு கை விடவேண்டுமெனவும் தெரிவித்தனர்.

22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago