2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு: இம்ரான் கான்

Super User   / 2011 மார்ச் 27 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சம்பியனாகுவதற்கு சிறந்த வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய இம்ரான் கான், 'இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு எப்போதாவது  வாய்ப்பிருக்கிறது என்றால் இதுதான் சிறந்த வாய்ப்பாகும்.  அது சமநிலையான அணி. சொந்த மண்ணில் விளையாடுகிறது. சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது' என்றார்.

 சம்பியனாகும் வாய்ப்பை கொண்டிருப்பதாக கருதப்படும் அணிகள் எல்லா தடவைகளும் வெல்லும் என்றில்லை. உள்நாட்டு அணியும் சம்பியனாகியதில்லை. ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் 'முதல் தடவை' என்று ஒன்று இருக்கிறது' என்றார்.

சகலதுறை வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த ஒரேயொரு அணித் தலைவராக விளங்குகிறார்.  அவரின் தலைமையில் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக்கிண்ணத்தை வென்றது.

இவ்வருட உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் புதன்கிழமை இந்திய - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதவுள்ள நிலையில் இம்ரான் கான் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என்று தான் வெளிப்படையாக விரும்புவதாகவும் ஆனால் இப்போட்டியில் இந்திய அணிக்கே சாதகமான அம்சங்கள் அதிகம் எனவும் அவர் கூறினார்.

'ஈரலிப்பான சூழ்நிலையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான இலக்கு நிலவும் போட்டியில் ஈரலிப்பான சூழ்நிலை இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு வாய்ப்பாக அமையும். இது குறித்து அவ்ரிடி என்னிடம் பேசி தனது கரிசனையை வெளியிட்டார்.

அவ்ரிடி 10 ஓவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால் அது  போட்டியில் பெரிய வித்தியசாத்தை ஏற்படுத்தும்' என இம்ரான் கான் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

'பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியும் துடுப்பாட்டத்தில் இந்திய அணியும் பலமானவை. எனவே அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொருத்தே வெற்றி கிட்டும்.

இந்திய அணித்தலைவர் எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டின் 3 வகை போட்டிகளிலும் அணித்தலைவராக உள்ளமை அவருக்கு சாதகமானது. அவ்ரிடி டெஸ்ட் அணித்தலைவராக செயற்பட இணங்காததன் மூலம் தவறிழைத்துவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்காவிட்டால் ஒருநாள் போட்டிகளின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினம். இதில் டோனி சாதகமான தன்மையை கொண்டுள்ளார்' என்றார்.
 


  Comments - 0

 • mahsmali Monday, 28 March 2011 01:55 PM

  let's wait and see. we are very keen to wait Final. Who is going to retake WORLD CUP that's SRI LANKA. Imran Khan, you have Experience to say but we are watching each and every match and attitude belongs Team that's our Brave Sri Lankans. Final will play Pakistan VS Srilanka.

  Reply : 0       0

  F.Getroot Tuesday, 29 March 2011 02:23 PM

  சும்மா கனவு கண்டிருப்பார் பாவம் world cup மீண்டும் எமக்கே don't worry about that.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .