2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ஜெவ் மார்ஷ் நியமனம்

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெவ் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக 'ஸ்ரீலங்கா கிரிக்கெட்' அறிவித்துள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இரு வருடகாலத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

52 வயதான ஜெவ் மார்ஷ் அவுஸ்திரேலியாவுக்காக 50 டெஸ்ட் போட்டிகளிலும் 119 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியவர்.

1987 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும்  அவர்இடம்பெற்றார்.1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது அவ்வணியின் தலைவராக ஜெவ் மார்ஷ் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 2000 முதல் 2004 வரை அவர் ஸிம்பாப்வே அணியின் பயிற்றுநராகவும் பணியாற்றினார்.

தொடர்புடைய செய்தி: 

ஆஸி வீரர் ஷோன் மார்ஷின் தந்தை, இலங்கை அணியின் பயிற்றுநராவாரா?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X