2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கால்கோள் விழா...

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவி ரீதியில் உள்ள பாடசாலைகளில், முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று (28) நடைபெற்றது. 
 
பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றனர். 
 
நீர்கொழும்பில்...  
 
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை  இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. 
 
 
யாழ்ப்பாணத்தில்...
 
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். (செந்தூரன் பிரதீபன்)
 
 
பேத்தாழையில்... 
 
மட்டக்களப்பு கல்குடா பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான 1 ஆம் தரத்தில் கல்வி பயிலவுள்ள மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு விழா வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.   ஆர்.ஜெயஸ்ரீராம்

இரத்தினபுரியில்...

சப்ரகமுவ மாகாண நிகழ்வு இன்று(28) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இரத்தினபுரி எட்டிகந்த ஆரம்ப பிரிவு பாடசாலையில் இடம்பெற்றது. ஸ்ரீதராவ்

 

 

 
தலவாக்கலையில்...

மகிழ்ச்சிகரமான கற்றல் ஆரம்பம் என்ற தொனிப்பொருளுக்கு இணங்க தேசிய ரீதியில் நேற்று (28) தரம் 1 இற்கு புதிய மாணவர்கள் பாடசாலைக்கு உள்வாங்கப்பட்டனர். அந்தவகையில் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பாடசாலையில் தரம் 1 இற்கு புதிய மாணவர்கள் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ் தலைமையில்  உள்வாங்கப்பட்டனர். இதன்போது தரம் 2 மாணவர்களால் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ்,பிரதி அதிபர் விஜயசுந்தரம், ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். கேதீஸ்
 
 

    

மட்டக்களப்பு பெரியகல்லாறு மெதடிஸ்த்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. மட்டக்களப்பு  மாவட்டம்  பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மெதடிஸ்த்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் பூ.கமலதாசன் தலைமையில் செவ்வாய்கிழமை(28) நடைபெற்றது.                                                                                                                                                                                                                    வ.சக்தி

                     

 இராகலை
 
நாடளவிய ரீதியில் பாடசாலைகளுக்கு தரம் ஒன்று மாணவர்களை கால்ப்பதிக்க செய்யும் நிகழ்வு வலப்பனை கல்வி வலையத்திற்கு உட்பட்ட இராகலை கிருஸ்ணன் மாதிரி பாடசாலையின் அதிபர் இரா.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
 
இவ் வைபவத்தில் மதகுருமார்கள் வலப்பனை கோட்டக்கல்வி பணிப்பாளர்
வி.யோகராஜா, இராகலை உயர் நிலை தேசிய கல்லூரியின் அதிபர் மை.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள்,மாணலர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
 
                                                                                                                                                                                           ஆ.ரமேஸ்.
 

மட்டக்களப்பு கல்குடா 

மட்டக்களப்பு கல்குடா பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான 1 ஆம் தரத்தில் கல்வி பயிலவுள்ள மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு விழா வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது பாடசாலையின் சுற்றுச் சூழலானது மாணவர்களின் பெற்றோர்களால் வாழைமரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு காட்சியளித்தது.
கலாச்சார நிகழ்வுகளுடன் பாழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கையில் வைத்திருந்த மலர்மாலையை புதிய மாணவர்களுக்கு அணிவித்து கைகளில் பிடித்தவாறு நட்புடன் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். வகுப்பறையில் அதிதிகள் மற்றும் மாணவர்களால் மங்களவிளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.அதிபர் மாவர்களை வரவேற்று ஆசியுரையாற்றினார்.
 

                                                                                                                                                                       ஆர்.ஜெயஸ்ரீராம்  

                                                                  
 

வத்தேகம

தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் வைபவம் மமா/க/வத்/பன்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் ம.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமூக சேவகர்கள் கருப்பன் சொக்கையா தேவர் சத்தியசீலன் சந்திரகுமார் சத்திவேல் நல்லதம்பி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
                                                                                                                                                              மருதமுத்து நவநீதன்
 
 
கல்முனை
அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தில் இவ்வருடத்துக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்பவிழா அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் இன்று (28) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது... 
                                                                                                                                                                     காரைதீவு  நிருபர்
 
 
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X