Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். என். எம். அப்ராஸ்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவில்சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில், கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோனின் ஒத்துழைப்புடன் நட்பிட்டிமுனை பகுதியில் தெற்கு சுகாதார உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரும் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்துதடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்காக வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்றைய தினம் (28) இடம்பெற்றது.

இதன் போது தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், செயலணி பயிற்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026