Freelancer / 2023 மே 02 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். இஸட்.ஷாஜஹான்
பலத்த மழை காரணமாக நீர்கொழும்பு, தழுபத்தை பல்லன்சேனை வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக வாகன சாதிகளும் பொதுமக்களும் அசௌரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மழைக்காலங்களில் இந்தப் பகுதி அடிக்கடி நீரில் மூழ்குவதாகவும் வடிகான் அமைப்பையும் இந்த பகுதியில் ஓடும் வாவியையும் சுத்தம் செய்து சிறந்த முறையில் வடிகானை அமைக்க வேண்டும் என்றும் பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் உரிய தரப்பினர் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என பிரதேசவாசிகள் குற்றஞ்டுகின்றனர்.
வீதியில் இருமருங்கிலும் உள்ள வடிகான்களை அகழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமாயின் மழைக்காலங்களில் ஓரளவுக்கு நிலைமைகளை சமாளிக்க முடியும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.





.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025