Janu / 2024 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் வெள்ளிக்கிழமை (30) அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்கள், உப தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் உப்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
எஸ். சதீஸ்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .