2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புளியடிமடுப்பாலம் இடிந்தது...

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான கனரக வாகனமொன்று  மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு  புளியடிமடுப் பாலத்தின் மீது இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்த வேளையில், அப்பாலம் திடீரென்று இடிந்து விழுந்ததால்;  அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நீளமான வாகனம் என்பதால் வாகனம் ஆற்றினுள் விழவில்லை என்பதுடன், வாகனத்தில் சென்றவர்களும்; எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.  பின்னர், இந்த வாகனம் பாரம் தூக்கி ஊடாக மீட்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட களிமடுப் பகுதியில் மின்சார இணைப்பு வழங்குவதற்காக சுமார் 45 மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு  இந்த வாகனம் பயணித்;தது.

மண்முனை மேற்கு பிரதேச சபைக்குரிய இப்பாலம் கடந்த டிசெம்பர் மாதம் வெள்ளத்தின்போது சேதமடைந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருத்தியமைக்கப்பட்டது.  இந்த நிலையிலேயே தற்போது இப்பாலம் இடிந்துள்ளது. (படங்கள்: மாணிக்கப்போடி சசிகுமார்,கே.எல்.ரி.யுதாஜித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X