Editorial / 2017 ஜூலை 04 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவிக்குக் குழந்தை பிறந்துள்ள போதிலும், குழந்தை பிறப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அவருடைய மனைவியுடன் இருப்பதற்காக, அவர் இங்கிலாந்து நோக்கிப் பயணிக்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
அவருக்குப் பதிலாக, அணியின் தலைவராக, டீன் எல்கர் செயற்படவுள்ளார்.
இதேவேளை, முதலாவது போட்டியில் பங்குபற்றுவதற்கான உடற்றகுதியை, வேகப்பந்து வீச்சாளர் வேர்ணன் ஃபிலாந்தர் அடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணுக்காலில் உபாதை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
44 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
58 minute ago