Editorial / 2022 ஜனவரி 17 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்
இளைஞர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்கும் வகையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை அக்கரப்பத்தனை அயோனா விளையாட்டு கழகம் நடத்தியது.
வரலாற்றில் முதல் தடவையாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகள், கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில், அயோனா தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில், 8 அணிகள் கலந்துகொண்டன.
இறுதி சுற்றுக்கு அக்னி அணியும் லக்ஷ்மியும் கழகமும் தெரிவாகின. இப்போட்டியில் முதலாம் இடத்தை அக்னியும் இரண்டாமிடத்தில் லக்ஷசுமி அணியும் தனதாக்கிக் கொண்டது .
வெற்றி பெற்ற இரண்டு அணிகளுக்கும் வைத்திய அதிகாரி வேலு முத்துமணி, சமூக சேவையாளர் எம். சந்திரகுமார், நலன்விரும்பியான ஆர்.குணசீலன் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களான செல்வராஜ் கே. ஜெகநாதன் மற்றும் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி கிண்ணங்களையும் சான்றிதழ் உள்ளிட்ட பணப் பரிசுகளையும் வழங்கி வைத்தனர்.
இதற்கான ஒழுங்குகளை ஊடகவியலாளர் கே. புஷ்பராஜ், எஸ்.சுரேஷ் மற்றும் கே. ஞானசேகர் ஆகியோர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026