Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 26 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அத்லாண்டா சார்பாக, ஜோசிப் இலிசிச், றொபின் கொஸென்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், விலகல் முறையிலான சுற்றுக்கு நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆகியன தகுதி பெற்றுள்ளன.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஒஸ்திரியக் கழகமான ஆர்.பி சல்ஸ்பேர்க்குமிடையிலான குழு ஏ போட்டியொன்றில் அவ்வணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, கிங்ஸ்லி கோமன், லெரோய் சனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்.பி சல்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெர்ஜிம் பெரிஷா பெற்றார்.
இந்நிலையில், கிரேக்கக் கழகமான ஒலிம்பியாகோஸின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை பில் பொடென் பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago