Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 09 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லாண்டாவுக்குமிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிலான் ஸ்கிறினியர் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில், 62 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலனுள்ளது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸும், 50 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றோமாவுள்ளன. இதில், மற்றைய அணிகளை விட ஜுவென்டஸ் ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
26 minute ago
1 hours ago