Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிகும், அத்லெட்டிகோ மட்ரிடுக்குமிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
றியல் மட்ரிட் சார்பாக, கஸேமீரோ ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வலென்சியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ பில்பாவோவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. வலென்சியா சார்பாக, கார்லோஸ் சொலர், மனு வல்லெஜோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பில்பாவோ சார்பாக, ஆசியர் வில்லாலிப்ரே, றாவுல் கர்சியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026